858-பாரினில் விந்தைகள் |
பாரினில் விந்தைகள் புரிந்திடும் அழகே பாடுவேன் என்னில் வருவாயே பாவிகள் தஞ்சமே.... விரைந்து வா இது நேரம் பணிகின்றேன் அருள்புரிவாய் தாமரை தனது இதழ்கள் விரித்து நறுமணம் கமழ்ந்து வாழ்த்திடுதே என் மன இதழ்கள் விரிந்து நானும் பாடவே துணையாய் வாராய் நிலமும் வானமும் மகிழ்ந்து உனையே நிதம் நிதம் புகழ்ந்து வாழ்ந்திடுமே நின் தாள் பணிந்து என்றும் நான் வாழ துணையாக என்னில் வாராய் |