856-பாட்டு நான் பாடக் கேட்டு |
பாட்டு நான் பாடக் கேட்டு என் பாடல் நாயகா விருந்தாக வா வா உன் அன்பில் நான் இன்று ஒன்றாக வேண்டும் உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும் (2) இராகங்கள் இல்லாத வாழ்வென்னும் வீணையில் கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா சோகங்கள் மறைந்தோடும் உன் உணவால் இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில் - 2 அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா அதை நாளும் அணையாமல் நான் காக்க வா மாதங்கள் பன்னிரெண்டும் தேவா உன் திருவாசல் மானிடரின் வரவுக்காய் காத்திருக்கும் - தினம் மாறாத அன்புக்காய் பூத்திருக்கும் நீ வாழும் கோயில் தான் ஏழை என் உள்ளம் - 2 உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே உனை விட்டு பிரிந்தாலே அருளில்லையே இறைவா உன்னுடல் உண்டு உயிர் வாழும் நாளெல்லாம் உண்மைக்கு சான்றாகும் வரம் தாருமே - இறைவா உறவுக்காய் எனை ஈயும் மனம் தாருமே நிலை மாறி என் நெஞ்சம் தடுமாறும் பொழுதில் - 2 மறவாமல் எனை நாளும் கரம் பற்ற வா மழையாக அருள் ஈந்து மகிழ்வாக்க வா |