Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   855-பகிர்வினில் இணைந்திடுவோம்  
பகிர்வினில் இணைந்திடுவோம் - இறை
உறவினில் கலந்திடுவோம் (2)
இயேசுவின் உடலை உள்ளத்தில் ஏற்று
என்றுமே வாழ்ந்திடுவோம் - நாம்
என்றுமே வாழ்ந்திடுவோம்
இயேசுவின் நல் விருந்து - நிறை
வாழ்வினை தரும் விருந்து (2)

உயிருள்ள உணவாய் நீ இருக்க
உவப்புடன் உம்மை உண்டிடுவோம் (2)
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே - 2
உலகுக்கு அளித்து வாழ வைப்போம் - 2
இயேசுவின் நல் விருந்து - நிறை
வாழ்வினை தரும் விருந்து (2)

அழிவில்லா உணவாய் நீ இருக்க
அகத்தினில் ஏற்று வாழ்ந்திடுவோம் (2)
புவிதனில் புனிதனாய் நடந்திடவே - 2
புதுயுகம் படைப்போம் இப்பூவுலகில் - 2
இயேசுவின் நல் விருந்து - நிறை
வாழ்வினை தரும் விருந்து (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்