854-நெஞ்சமெனும் ஆலயத்தில் |
நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா உனைத் தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா என்னகம் எழுந்து இருள் ஒளித்து விண்ணகம் சேர்க்க வரவேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னகம் காண வரவேண்டும் அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வர வேண்டும் உன்னத வாழ்வில் உனையடைய என்னகம் நீயும் வரவேண்டும் |