Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   853-நெஞ்சுக்குள்ளே வாரும்  


நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே (2)
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே 2

ரிசத பக ரிச-ரிரிரி க- ரிச தப தச ஆ.ஆ..ஆ..ஆ

தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே
தேடச் சொல்லுதே தேடச் சொல்லுதே
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே
நாடச் சொல்லுதே நாடச் சொல்லுதே
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியைத் தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்
உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே -2
உன்னைத் தேடும் உள்ளம் ஒட்டிக் கொள்ளும் விண்ணிலே
உன்னைப் பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே

ரிசத பக ரிச-ரிரிரி க- ரிச தப தச ஆ.ஆ..ஆ..ஆ

வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே
மண்ணைத் தேடுதே மண்ணைத் தேடுதே
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே
விண்ணைத் தேடுதே விண்ணைத் தேடுதே
மேகமாயத் திரண்டு நீ அருளைப்
பொழியும் அண்ணலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா
உணவின் சுவையாகினாய்
உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே
உன்னைத் தேடும் உள்ளம் ஒட்டிக் கொள்ளும் விண்ணிலே
உன்னைப் பாடும் உள்ளம் வாழும் இந்த மண்ணிலே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்