852-நெஞ்சமெல்லாம் நீ நிறைவாய் |
நெஞ்சமெல்லாம் நீ நிறைவாய் தஞசமெல்லாம் நீ தருவாய் ராஐhதி ராஐனே... தேவாதி தேவனே.... என்னிதயம் வா.... உன்னுதயம் தா... நீ வரும் வேளையெல்லாம் உள்ளம் மகிழ்ந்திருக்கும் நீ வரும் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கும் எண்ணில்லா சுகம் வந்ததே ஈடில்லா அருள் தந்ததே (2) கள்ளம் விலகும் உள்ளம் மகிழும் இன்னல் தீரும் இன்பம் பெருகும் (2) இயேசு என்னில் வாருமே இதய அமைதி தாருமே என்னுள்ளம் நீ எழுந்தால் அமைதி நிலைத்து விடும் என்னில்லம் நீ வந்தால் ஆனந்தம் நிறைந்து விடும் கண்ணிலே வரும் காட்சியே உந்தன் முகமாய்த் தோன்றுதே என்னிலே எழும் எண்ணமே உந்தனின் நினைவாகுதே பாவம் விலகும் பாரம் நீங்கும் பாதை முழுதும் பாசம் பெருகும் இயேசு என்னில் வாருமே இதய அமைதி தாருமே |