825- |
நீயே வாழ்வும் வழியும் இறைவா உம்மை வணங்குகிறேன் உம்மை வாழ்த்துகிறேன் நலன்களால் நிரப்பும் இறைவா உந்தன் அன்பிற்கீடாய் இங்கு ஏதுமில்லை உறவுகள் வளர்ந்திட வருவாய் நீயின்றி எனக்கொரு சக்தியில்லை உறவென உயிரென இணைவாய் இதயத்தால் உம்மைத் தொழுகிறேன் இசையினால் உம்மைப் புகழ்கின்றேன் வருவாய் வரம்; தருவாய் வானின்று இறங்கிய வார்த்தையே வாழ்வில் துணையென வருவாய் புதுயுகம் மலர்ந்திட வேண்டியே ஆவியின் கொடைகளைத் தருவாய் பணியினால் உம்மைத் தொடர்கிறேன் பாசத்தால் உம்மைப் பணிகிறேன் வருவாய் அருள் தருவாய் |