849-நீதியின் தேவனே வர வேண்டும் |
நீதியின் தேவனே வர வேண்டும் நிம்மதி என் வாழ்வில் தரவேண்டும் ஏழைகள் ஆற்றிலே நீயன்றோ அவர் தம் வீழ்ச்சி உன் தோல்வியன்றோ உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம் உலகை எம் வியர்வைகளால் நனைக்கின்றோம் விளைகின்ற பொருளில் எமக்குரிமையில்லை விம்முகின்ற குரல்களுக்கும் முடிவுமில்லை எம் தெய்வமே இறiவா இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ முடிவுண்டோ வாழ்வுண்டோ லஞ்சத்தால் வாழ்வை விலை பேசிடுவர் பஞ்சமெனும் சங்கிலியால் பூட்டிடுவார் தேவையான பொருளை விலை ஏற்றிடுவார் ஏழை எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார் இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ முடிவுண்டோ வாழ்வுண்டோ |