848-நீ போகும் பாதையில் |
நீ போகும் பாதையில் நான் வாழவேண்டும் இறைவா என்னுள்ளம் வா உன் அன்பில் நான் வாழவேண்டும் இறைவா என்னுள்ளம் வா - 3 நீரின்றி வாழ்ந்திடும் வேரினைப் போலிங்கு அருளின்றி இருளோடு வாழுகின்றேன் - 2 என் அன்பு தேவனே என் இயேசு நாதனே என்னுள்ளம் நீ எழுந்தால் என் வாழ்வு நிறைவு பெறும் - 2 என் வாழ்வின் ஒளியாக வா நீதியும் நேர்மையும் என் வாழ்வின் நிலையின்றி அலைந்தாடும் படகாக வாழுகின்றேன் - 2 நீதியின் தேவனே வாய்மையின் நாதனே என்னுள்ளம் நீ எழுந்தால் என் வாழ்வு உயர்வு பெறும் - 2 என் வாழ்வின் உயிராக வா |