847-நினைவாலே உருவாகி |
நினைவாலே உருவாகி உயிரோடு உறவாட வாழ்வோடு வாழ்வாகி வளமோடு நான் வாழ உளமோடு நீ பேச வா இறைவா நீ பேச வா - 2 அடிமை விலங்கை அகற்றி வாழ இறைவன் அரசை உலகம் அறிய (2) அன்புப் பாதையில் நடந்து சென்று - 2 உன் உறவில் என்றும் மகிழவே உளமோடு நீ பேச வா இறைவா நீ பேச வா - 2 அன்பின் சின்னம் என்னில் வளர அன்பைப் பகிர்ந்து பெற்று வாழ (2) பொய்மை ஒழித்து பகைமை மறந்து - 2 உன் இதயக் கோயிலில் குடிகொள்ளும் உளமோடு நீ பேச வா இறைவா நீ பேச வா - 2 |