846-நானே வானினின்று |
நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு - இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் - 2 எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் ஆ ஆ 2 என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் அழிந்துபோகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ ஆ - 2 என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் வாழ்விற்கே உழைப்பீர் மடிந்துபோன முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ ஆ 2 உங்கள் மன்னன் என்னை உண்ணும் எவரும் மடிவதேயில்லை மனுமகனின் தசையை உண்டு குருதி குடிப்பவன் ஆ ஆ 2 அவன் முடிவில்லாத வாழ்வை அன்றோ முனைந்து பெறுகிறான் ஜீவன் உள்ள தந்தை என்னை உலகிற்கு அனுப்பினார் ஆ ஆ - 2 என்றும் அவரால் வாழும் உன்னை உண்டால் என்னால் வாழ்வார்கள் |