845-நான் தேடும் நோக்கங்களை |
நான் தேடும் நோக்கங்களை இயேசுவிடம் கண்டு கொண்டேன் நான் வாழும் நாளெல்லாம் அவரின் சொந்தமாய் வாழ்ந்திருப்பேன் இன்னாள் எனைத் தந்தேன் நான் தேடும் நோக்கங்களை தாயின் வயிற்றில் இருந்த போதே என்னை அன்றே அவர் நினைத்தார் சேயாய் நானும் பிறந்த போதே அன்பால் முழுதும் என்னை நிறைத்தார் - 2 என்னென்று நான் சொல்வேன் - என் இதயத்தை தந்துவிட்டேன் பிளவு படாத நெஞ்சத்துடன் - இனி நான் வாழ்ந்திருப்பேன் - 2 நான் தேடும்... ஏழையோருக்கு நற்செய்தி சொல்ல இயேசு இன்று என்னை அழைத்தார் பகிர்ந்து வாழும் பண்பைக் காட்ட பாரில் என்னை அவர் குறித்தார் என்னென்று நான் சொல்வேன் - என் எல்லாமே தந்து விட்டேன் எது இல்லாத தோழமையில் இனி நான் வாழ்ந்திருப்பேன் இணைந்து வாழும் மானிடர் தம்மில் இயேசு வந்து குடியிருப்பார் பணிந்து ஆற்றும் சேவை தன்னில் பரமன் அரசு அவர் அமைப்பார் என்னென்று நான் சொல்வேன் - என் தன்னுரிமை தந்து விட்டேன் இறையுளம் தானே பெரிதென்று இனி நான் வாழ்ந்திருப்பேன் |