Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   844-நற்கருணைப் பந்தியிலே  


நற்கருணைப் பந்தியிலே அமர்ந்திடுவோம் வாரீர் - 2
நாம் நன்றியோடு திருவுணவை அருந்திடுவோமே (2)
நற்கருணைப் பந்தியிலே அமர்ந்திடுவோம் வாரீர்

பக்தியோடு உணவை உண்டு வாழ்வு அடையலாம்
நாம் சக்தி பெற்று வாழ்விலோங்க வழியும் பிறக்கலாம்; (2)
என்னை உண்டு வாழ்பவர்கள் என்றும் நிலைப்பார் - 2 என்று
யேசு சொன்ன பொன்மொழியை விசுவசிப்போமே

இனிமையான விருந்து ஒன்றை யேசு படைத்தார்
நாம் இன்புறவே வாழ வேண்டும் என்று நினைத்தார் (2)
வானின் உணவை உண்பவர்கள் என்றும் அழியார் - 2 என்று
வானரசன் கூறியதை வாழ்ந்து காட்டுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்