843-தேவநற்கருணையே |
தேவநற்கருணையே தெய்வீக விருந்தே சீவியம் தரவாரும் திவ்ய இயேசுவே ஆத்துமத்தின் சீவியம் ஆனவர் நீரே காத்திருக்கின்றோம் உம்மை காதலாகவே பசித்தவர் போசன பானந்தேடல் போல் பாவி நான் தேடுகின்றேன் தேவரீரையே உம்மை உண்டவர்களே உயிர் வாழுவார் உம்மை உண்ணாதவர்கள் உயிர் மாழுவார் அணையில்லாத தயவின் அடையாளமாய் இணையில்லா அற்புதம் இயேசுவே செய்தீர் விண்ணவரின் அப்பமே வேக நேசத்தால் மண்ணவரின் அப்பமாய் மாறி வந்ததே நேசமான இயேசுவே நீசப் பாவி நான் ஆசையாலே அண்டினேன் அன்பு கூருவீர் உம்மை உண்பவரெல்லாம் உம்மில் தங்கியே இம்மையும் மறுமையும் இன்பம் கொள்வீரே |