Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   841-தேடும் எந்தன் தெய்வம்  


தேடும் எந்தன் தெய்வம் - உன்னை
நாளும் பாடவா
தினம் பாடும் எந்தன் உயிரில் - வாழும்
ஜீவனே தேவா - என்னைத் (2)

மனதின் மகிழ்ச்சியே மாபரனே - எந்தன்
மகத்துவப் படைப்பெழில் காரணனே (2) உம்மைத்
தேடித் தேடி வாடும் நெஞ்சம்
உம்மைக் காணவே - என்
தேவன் உம்மை தினமும் - பாடும்
ஜீவனில் நீ வா - 2

உன் நிலை ஒன்றே உயிராகும் - தினம்
உன் துணை ஒன்றே வாழ்வாகும் (2) என்
ஜீவ நாதம் நீயும் கேட்டு
எழுந்து என்னில் வா - உன்
தேவ நாமம் நானும் - பாட
விரைந்து என்னில் வா - 2

இதயத்தில் இருளினை அகற்றிடவே - உந்தன்
உதயத்தின் தாரகை ஒளிர்ந்திடவே (2) உம்மைத்
தேடித் தேடி வாடும் நெஞ்சம்
உம்மைக் காணவே - என்
தேவன் உம்மை தினமும் - பாடும்
ஜீவனில் நீ வா 2
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்