Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   840-தேடும் அன்புத் தெய்வம்  


தேடும் அன்புத் தெய்வம்
என்னைத் தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும்
புவி வாடும் நிலைகன் மாறும் - 2
இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை
எந்தன் வாழும் காலம் போகும்

வார்த்தையாகி நின்ற இறைவன் - இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன் - 2
பாரில் எங்கும் புதுப் பாதை தந்து - அந்தப்
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன் - 2
இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை
எந்தன் வாழும் காலம் போகும்

அடிமை அமைப்பு இங்கு ஒழிய
எங்கும் மனித மாண்பு மலர
புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்
இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை
எந்தன் வாழும் காலம் போகும்

உறவுப்பாலம் இன்று வளர - இங்கு
இறைவன் அரசு மலர
உதயமாகிவந்து இதயம் யாவும் தந்து
உலகம் வாழ வைத்த இறைவன்
ஞாலம் கடந்த கலைஞன் - என் தலைவன்
இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை
எந்தன் வாழும் காலம் போகும்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்