Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   839-தெய்வீக ராகம்  


தெய்வீக ராகம் தேன்சிந்தும் ராகம்
தேவா உன் நினைவாக உருவான ராகம் - 2 (2)
என் பாடல்தானே உன் கோயில் நாளும் - 2
அரங்கேறும் வேளை ஆனந்தமே
உயிரே வருக உறவைத் தருக
உயிரே உனக்காக உயிரான பாடல்
உறவே உனக்காக நான் பாடும் பாடல்

உன் நாமம் சொல்லாத நாவில்லையே
எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே (2)
உன் நாமம் தானே நெஞ்சாரப்பாட - 2
சுகமான ராகம் நான் பாடும் பாடல்
உயிரே....

உன் மாட்சி உயராத இடமில்லையே
உன்னாட்சி மலராத மனமில்லையே (2)
உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட - 2
மேலான ராகம் நான் பாடும் பாடல்
உயிரே....


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்