Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   838-தெய்வமே வாரும்  


தெய்வமே வாரும் என்னிலே நான்
தேடிடும் வாழ்வு உம்மிலே (2)
அன்பிற்காய் ஏங்கும் ஆடு நான்
அன்பின் ஆயனைத் தேடினேன் ஆசையாய்

வாழ்வது நானா இயேசுவே - என்னில்
வாழ்ந்திடும் அன்பின் நேசரே (2)
நீரின்றி நானில்லை என்றுமே - வாழ்வில்
நீங்கிடா நின் துணை என்னிலே (2)
நீங்கிடா நின் துணை என்னிலே

உள்ளத்தின் ஆழம் அறிந்தவா - என்னில்
உள்ளது யாவும் தெரிந்தவா (2)
உன் துணையில் நான் வாழ்ந்திடவே - இனி
உன்னதமாகும் என் உள்ளமே (2)
உன்னதமாகும் என் உள்ளமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்