Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   836-தீபமே எழுந்து வா  


தீபமே எழுந்து வா என் தெய்வமே
என்னில் வா - தெய்வமே எழுந்து வா

எரி திரியாய் எழுந்து நின்றேன்
எதிர் வினையால் அணைந்து வீழ்ந்தேன்
உன்னை ஏற்றி எனை எரிக்க
அணையா விளக்கே அகத்தில் வா

பிறக்கும் முன்னால் இருளில் கிடந்தேன்
பிறந்த பின்னும் இருளின் நின்றேன்
இறக்கும் நேரம் தொலைவில் இல்லை
எரியும் விளக்கே விரைவில் வா

உண்மை வழி நீயே என்றாய்
உனைத் தொடர எனைப் பணித்தாய்
உன்னொளியின்றி எவ்வழி செல்வேன்
உலகின் ஒளியே எழுந்து வா

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்