825-தினம் தினம் வலம் வரும் |
தினம் தினம் வலம் வரும் எந்தன் காலடி நலம் தரும் வளம் தரும் தெய்வதாளடி - 2 சரண் என்று தேடினால் தோன்றி தேற்றுவார் அரண் நாமே அஞ்சுதற்கென்று ஆற்றல் நல்குவார் - 2 வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் - 2 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம் (தினம்) கரை இன்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும் மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே - 2 இறை கரம் தரும் வரம் போதும் வாழ்விலே - 2 குறை போக்கி கறை நீக்கி வாழ்வோம் பாரிலே (தினம்) |