Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   834-திருவிருந்து திருவிழா  


திருவிருந்து திருவிழா
என் இதயம் தினம் லிழா
என் யேசு தேவன் உடலும் குருதியும்
உயிரில் கலந்திடும் விழா

இறைவேள்வித் தீயினிலே என்
இதயம் தூய்மை பெறும்
நிறை தியாகப் பலியினிலே
வெண் பனிபோல் மாறிவிடும்
அமைதிப்புறா இது அன்பு நிலா
எந்த இரவிலும் ஒளியின் விழா
இறை அனுபவப் பகிர்வு விழா

இறைவருகையின் வேளையிலே
அன்புக் கனலாய் மாறுகிறேன்
சுயநலத்தின் அழிவினிலே
புது உலகமே காணுகிறேன்
இதயமில்லா ஒரு மனிதரிலா
அந்த இறைவன் பிறப்பு விழா
அது நீத்தார் நினைவுவிழா

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்