Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   833-திருவிருந்து திருவிருந்து  

திருவிருந்து திருவிருந்து
இயேசு தரும் திருவிருந்து திருவிருந்து
அருமருந்து அருமருந்து
வாழ்வுதரும் அருமருந்து.. அருமருந்து
பசியெல்லாம் மாற்றிடும் திருவிருந்து (2)
தாகமெல்லாம் தீர்த்து வைக்கும் அருமருந்து

அவனியைக் காத்து வரும் அன்பின் திருவிருந்து
அமைதியைத் பேணிவரும் கருணையின் திருவிருந்து
அன்பரின் தோழமையில் இணைத்திடும் திருவிருந்து
அனைவரையும் ஓர் குலமாய் வாழவைக்கும் திருவிருந்து

வெறுமையை விரட்டி விடும் மன்னவன் திருவிருந்து
கறைகளைப் போக்கிவிடும் தூயவன் திருவிருந்து
இயேசுவின் மனநிலையை வளர்த்திடும் திருவிருந்து
போதும் அருள்போதும் மனநிறைவு தரும் திருமருந்து

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்