Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   832-திருவிருந்து இது இறை விருந்த  
திருவிருந்து இது இறை விருந்து - 2
மறைபொருளாகும் அருமருந்து 2

பாவங்கள் புரிந்து பலமுறை விழுந்தோம்
மன்னிப்பு அடைந்து எழுந்தே வருவோம் - 2
அருகதை ஏதும் நமக்கிங்கு இல்லை
இருந்தும் அழைத்தார் விருந்துக்குச் செல்வோம் - 2

இறைவனின் உடலும் குருதியும் அருந்தி
வளமுடன் வாழ்வை அமைத்திட முனைவோம் - 2
சிந்தனையெல்லாம் யேசுவே வாழ
சொல் செயல் யாவும் விருந்தே ஆகும் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்