831-தியாகத் தருவே |
தியாகத் தருவே திருவிருந்தே தினம் தினம் நாவில் வரும் அமுதே தியாகத் தருவே திருவிருந்தே உண்டு மகிழ்வோர் உயிpர் பிழையார் உம்மை உண்போர் உயிர் பெறுவார் - 2 உள்ளத்தில் கோயிpல் கொண்டிட வா உயிருடன் ஒன்றாய்க் கலந்திட வா. அறுந்திட்ட கம்பி இசை தருமோ முறிந்திpட்ட கிளையோ வளர்ந்திடுமோ - 2 ஏழையென் வாழ்வு வளம் பெறவே என்றும் உம்முடன் இணைந்திடவே. கலைந்த இதயம் கரைந்திட வா கனிந்த அன்பு ஒழுகிட வா - 2 வாழ்வெல்லாம் அன்பு வழிந்திட வா வருக அன்பே வரம் பொழிவாய். |