830-தாயைப்போல என்னைத் |
தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே சேயைப்போல உந்தன் மார்பில் என்னைத் தாங்குமே என் காயங்கள் நீ ஆற்றவா என் சோகங்கள் நீ மாற்றவா விழியின் ஈரம் காயும் முன்பே அணைக்கவா பழிகள் சூழும் தருணம் எல்லாம் காக்கவா உண்மை என்ன பொய்மை என்ன விளங்கவில்லையே விழிகள் காட்டும் வெளிச்சம் கூட உறுதி இல்லையே பாசம் என்ன வேசம் என்ன அறியவில்லையே அழிவுக் குழியில் விழுந்த நிமிடம் யாரும் இல்லையே மரணம் சூழ்ந்த இருள் வழி பார்வை தொலைத்த இரு விழி நீர் வாருமே கை தாருமே-2 நரக துன்பம் அறிந்தேன் இறைவா மீட்க வா - 2 எந்த பாதை வாழ்வின் பாதை தெரியவிலைலையே அறிந்த போதும் திரும்பி வரவும் வழிகளில்லையே கடலில் பாதி கரையில் பாதி கால்கள் வைக்கின்றேன் அலையின் வலிமை இழுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றேன் வாழ்க்கை முழுதும் வருத்தங்கள் இதயம் வழியும் துயரங்கள் என் வாழ்வையே பூந்தோட்டமாய் -2 மாற்றும் வல்ல தேவன் என்று காட்டவா 2 |