827-தன்னை வழங்கும் தலைவன் |
தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது (2) உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது - நாளும் உண்மையின் சாட்சியாக அழைக்குது அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் (2) அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 நம் உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடி வரும் (2) மனித நேயம் மானிடரில் காண ஏங்கிடும் - 2 நம் மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட |