Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   825-செம்மறியின் விருந்துக்கு  


செம்மறியின் விருந்துக்கு
அழைக்கப்பெற்றோர் பேறு பெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன?
உறைய வரும் இறைவனை - நாம் ஏற்கத் தடையென்ன?
உள்ளக் கதவு திறந்தது - அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்துஎன்னை ஆளுவாய்

வானம் பொழிய பூமி விழைய வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

உலகம் எல்லாம் இணைந்தது உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே
மனித உள்ளம் நிறைவது உன்புனித உறவிலே
மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்