Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   824-செந்தமிழில் உந்தன் புகழ்  


செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி - நான்
பாடிடுவேன் இறைவா - என்
சிந்தனையில் நீ இருந்து வாழ
எழுந்தருள்வாய் தலைவா - என்னில்
எழுந்தருள்வாய் தலைவா

பாலையில் மன்னா வழங்கி நின்றாய்
பலியினில் உன்னை வழங்குகின்றாய்
காலையில் உணவின்றித் தவிக்கின்றேன்
கனியமுதாய் என்னில் எழுந்தருள்வாய்

உன் உடல் உயிர்த்ததுன் வல்லமையால்
உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால்
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே
இறைமகனே இன்று எழுந்தருள்வாய்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்