802- |
சரணடைந்தேன் தேவா சரணடைந்தேன் உன் மலர்ப்பாதத்தில் சரணடைந்தேன் (2) படைத்தவனே என் பரம்பொருளே என் இதயத்தில் எழுந்தே நீ தங்கிடுவாய் உன் சந்நிதி ஒன்றே போதும் போதும் - நான் எந்நாளும் மகிழ்வினில் வாழ்ந்திடுவேன் (2) உள்ளமும் உயிரும் உமக்கே தருவேன் உன்னத உறவினில் வனர்ந்திடவே (2) உனை நான் பெற்று உன்னுடன் இணைந்து உன்னிலே கரைவேன் உனை நான் பெற்று உன்னுடன் இணைந்து புதுப்பிறப்படைவேன் எளிய எந்தன் இதயம் நீ சேரும் நேரம் - நான் என்னையே உன்னிடம் இழக்கின்றேன் (2) என்னிலே தங்கிடு என்னையாண்டிடு என் இறைவா நான் இன்று சரணடைகின்றேன் (2) உனை நான் பெற்று உன்னுடன் இணைந்து உன்னிலே கரைவேன் உனை நான் பெற்று உன்னுடன் இணைந்து புதுப்பிறப்படைவேன் |