802- |
கொண்டாடுவோம் திருவிருந்து நம்மை ஒன்றாக்கும் ஒற்றுமை விருந்து (2) நம் தேவன் தந்தை தனயன் ஆவி ஒன்றாக இருப்பது போல் இணைந்து வானகத் தந்தை தரும் வாஞ்சையின் விருநது இது நம் மீட்பினை புதுப்பிக்குமே ஆவியில் உயிர்ப்பிக்குமே (2) நம் தந்தை அவரே உரிமை மைந்தர் நாம் எல்லோரும் சோதரர் ஒன்றாகுவோம் புலர்ந்திடும் புது உலகில் நலம் தரும் விருந்து இது நம் பார்வையை விரிவாக்கும் பாதையை தெளிவாக்கும் (2) நாம் யாவரும் யேசுவின் சொந்தங்களே அவர் உடலில் நாம் அங்கங்களே . |