820-களங்கமில்லா ஒளியே |
களங்கமில்லா ஒளியே என்னில் கலந்திட வரும் வளியே கரைசேர்ந்திட வரும் இறையே களங்கமில்லா ஒளியே இறைகுலம் போற்றும் இணையில் வேந்தே இறைஞ்சுகின்றோம் வருக நிறைவுறும் மகிழ்வே நிலைக்களன் அன்பே நிம்மதியே வருக மறைந்தெழும் உணவே மாண்புறும் உறவே மனமகிழ்ந்தே வருக. திருவிலும் திருவே தேனிலும் சுவையே திருவிருந்தே வருக கருணையின் வடிவே காத்திடும் அருளே கனியமுதே வருக இருளினைக் காய்த்து எழும்கதிர்போல என்னுள்ளமே வருக. பிறப்பினில் வளர்ந்து மனம் எனில் மலர்ந்து மணம் பெறவே வருக சிறந்திடும் இளமை மகிழ் உமக்காக விளங்கிடவே வருக இறந்திடும் பொழுது இறையுனைத் தொழுது இன்புறவே வருக |