818-கருணைத் தேவனே கனிவாய் |
கருணைத் தேவனே கனிவாய் என்னில் வா வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே உணவாய் எழுந்து வா அன்பே உன் வரவின்றி அருளே துணையின்றி இருளில் நான் தள்ளாடுவேன் உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி துயரில் நான் கண்மூடுவேன் உயிரூட்டும் உணவாகவா வழிகாட்டும் விளக்காகவா ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே ஊர் தூங்கும்வேளை ஒளி தூவும் நிலவாய் என் வாழ்வின் ஒளியாகினாய் வழிபார்த்துக் கண்கள் நீர் கோர்த்து நிற்க என் பாதை வழியாகினாய் என் தேவன் இல்லையேல் என்னுள்ளம் தடுமாறுமே உன் பாதை நானில்லையேல் என் வாழ்வு வீணாகுமே |