Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   817-கருணையின் உருவே இறைவா  
கருணையின் உருவே இறைவா
கரையில்லா அருள் நிறைத் தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா - எம்
கனவுகள் மெய்ப்பட வருவாய் (2)

பகைமையும் வெறுப்பும் அழிந்திடனும்
பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடனும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடனும்
நிம்மதி வாழ்வில் நிறைந்திடனும்
இதயங்களில் இரக்கம் வேண்டும்
இன்னல்களில் உதவ வேண்டும்
உறவுகளில் உண்மை வேண்டும்
வேற்றுமைகள் மறையனும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி
உருவானால் பேரின்பம் (2)

வறுமையும் பிணிகளும் ஒழிந்திடனும்
வளமையும் வாழ்வும் பெருகிடனும்
தீமையின் வேர்கள் அழிந்திடனும்
நன்மையின் பாதைகள் தெரிந்திடனும்
போர்களில்லா பூமி வேண்டும்
புவியினிலே அமைதி வேண்டும்
ஆயுதங்கள் அழிய வேண்டும்
அன்புலகம் மலரனும் (இந்த உலகில்... - 2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்