Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   816-ஒவ்வொரு பகிர்வும்  


ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் - 2

இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம்
எதிலும் இல்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம்
இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள்
நீதியில் நிலைத்திடுமே
நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம்
நாளைய உலகின் விடியலாகவே

பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே
வேதமாய் ஆனது
புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே
புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும்
இறையன்பின் சாட்சிகளே
இதை உணர்வோம் நமைப் பகிர்வோம்
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்