Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   815-ஒளியான என் தெய்வமே  


ஒளியான என் தெய்வமே
நல்வழிகாட்டும் மணிதீபமே
என்னுள்ளம் எழுந்து வா
என்னில்லம் நிறைய வா

என்னுள்ளம் நிலமானது - அதில்
உன் வார்த்தை விதையானது ஆ..... (2)
சிலமட்டும் பயிரானது - அதில் - 2
அது காயாகி கனியானது

இருள் நீக்கும் ஒளியானவா - வாழ்வில்
அருள் சேர்க்கும் வழியாக வா ஆ..... (2)
தெய்வீக உணவாக வா - என் - 2
என்றும் மாறாத என் மன்னவா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்