Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   813-ஒளியாம் இறையே வாராய்  
ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே

விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ - 2
எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக

நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வனமும் வாழ்வும் உம்மால்

அருளே பொங்கும் அமலா
இருளே போக்க வா வா
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வா வா

மண்ணோர் உயிரே வாராய்
மறையின் தெளிவே வாராய்
விண்ணோர் நிறைவே வாராய்
வினையை நீக்க வாராய்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்