Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   812-ஒரு வார்த்தை சொன்னால்  
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
என்னுள்ளம் குணமாகும் உன்னில்லாகும்
நீ வந்து எனை ஆள நினைவெல்லாம் பூவாகும்

இருள் மூடும் என் நெஞ்சில்
விடிகாலை பொழுதாகி
பூபாளம் நீ இசைப்பாய் - ஒரு
பொன்காலை நீ அமைப்பாய் - அந்த
அழகான நேரத்தில் ஆத்மாவின் இராகங்கள்
அலையாக அணிவகுக்கும் - அன்பில்
உனையேற்க உள்ளம் திறக்கும்

கலங்காத விழியில்லை பிரியாத உறவில்லை
எல்லோருக்கும் நீ தஞ்சமே - இயேசு
எந்நாளும் நீ சொந்தமே - இன்று
எது வந்த போதும் என்
இதயத்தில் பயமில்லை
உன் வார்த்தை எனை ஆள்வதால் - உன்னில்
என் வாழ்க்கை அலைபாய்வதால்

அமுதான உன் வார்த்தை நதியாக வழிந்தோட
அனல் கூட இளம் தென்றலாம் - இன்பம்
சுனையாக பொழிந்தோடலாம் - நெஞ்சில்
விருந்தாகி எனைத் தேடி
விரைந்தோடி நீ வந்தால்
ஆனந்த சங்கமங்கள் என்னில்
ஆயிரம் சந்தோசங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்