811-ஒரு நாளும் உனை மறவா |
ஒரு நாளும் உனை மறவா திரு நாள் தினம் வேண்டும் அருள் தேடும் என் விழிகளுக்கு கருணை மழை வேண்டும் (2) இயேசுவே வாருமே - 2 இயேசுவே எந்தன் நேசரே என்னோடு பேச வாருமே (2) ஆயிரம் ஆயிரம் உறவுகளும் அலை அலையாய் வரும் நினைவுகளும் சேய் என்னை தேற்றிடும் நிகழ்வுகளும் திருமகன் உந்தன் உயிர்ப்புகளே ஆ... (2) கலங்கரை விளக்கே வா காரிருள் நிலவே வா கதியென நினைக்கும் அடியவர் மனதில் அமர்ந்திடவே நீ வா (2) பகிர்வுகள் தருகின்ற நிறைவுகளும் தியாகத்தினால் வரும் உயர்வுகளும் அடியவர் பணியில் அகமகிழ்வும் தலைவா உமது வழியல்லவா ஆ...(2) உன்னைப் போல் நான் வாழ்வேன் உலகில் இனி உயர்வேன் உந்தன் அருள் துணை என்னில் இருக்க கவலைப் படமாட்டேன் (2) |