Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   810-ஒரு நாளும் அழியாத  


ஒரு நாளும் அழியாத உறவென்னிலே
உருவாக்கும் அருள் இயேசு வரவென்னிலே
பிரிவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்
எனை ஆளும் அவரன்பு இனி நாளாகுமே

நட்பென்னும் வானங்கள் இருள் மூடும் போதிலே
உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே - 2
உன் அருள் அன்பு எனைத் தாங்குமே
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரங்கள்
ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து
ஒரு நாளும் அழியாத உறவொன்று தா

இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே
இரவென்ன பகலென்ன இதயத்துள் நீ பேசவே - 2
இனி எந்நாளும் பயம் இல்லையே
முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே
ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்
உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்