Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   809-ஏழிசை நாதனே எழுவாய்  


ஏழிசை நாதனே எழுவாய் - இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக்காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்

வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து
உறவை வளர்க்கும் விருந்து என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து

வழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளி விளக்கு
மனிதம் வாழும் தெய்வம் என்னில்
புனிதம் வளர்க்கும் நம் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்