806-எனையாளும் தேவன் |
எனையாளும் தேவன் எனைத் தேடும் ஆயன் எனைத் தேற்ற இன்று எழுந்தென்னில் வந்தார் அவரென்னில் இணைய என்னுள்ளம் மகிழ - 2 அவர் தந்த ராகம் நாம் பாடுவோம் பாடுங்கள் பாடுங்கள் பாரெல்லாம் படைத்தவர் புகழினை பாடுங்களே பாழ்வெளிப் பயணத்தில் பாவி நம் பாவத்தை பாசத்தால் ஏற்றவரை (2) காலங்கள் எல்லாம் அவர் நம்மைக் காக்க காணாத இன்பங்கள் நாம் காணுவோம் நம் தேவன் இன்று நம்மோடு என்றும் - 2 நலமாக நம்மைக் கரை சேர்க்க இன்று பாடுங்கள் பாடுங்கள் பாரெல்லாம் படைத்தவர் புகழினை பாடுங்களே பாழ்வெளிப் பயணத்தில் பாவி நம் பாவத்தை பாசத்தால் ஏற்றவரை (2) ஏதேதோ ராகம் ஏதேதோ தாளம் எல்லாமே இங்கு யார் தந்தது நம் தேவன் இன்று நம்மோடு என்றும் - 2 நலமாக நம்மை கரை சேர்க்க இன்று பாடுங்கள் பாடுங்கள் பாரெல்லாம் படைத்தவர் புகழினை பாடுங்களே பாழ்வெளிப் பயணத்தில் பாவி நம் பாவத்தை பாசத்தால் ஏற்றவரை (2) அழிந்திடும் வாழ்வில் ஆண்டவர் இன்று அழியாத ஆன்ம உணவாக வந்தார் நம் நோய்கள் தீர்த்து நமைத் தேற்ற இங்கு - 2 நம் தேவன் இன்று நமைத் தேடி வந்தார் பாடுங்கள் பாடுங்கள் பாரெல்லாம் படைத்தவர் புகழினை பாடுங்களே பாழ்வெளிப் பயணத்தில் பாவி நம் பாவத்தை பாசத்தால் ஏற்றவரை (2) |