804-எனக்குள்ளே உறவாடும் |
எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழுவேன் (2) உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர நீயாக எனை மாற்றும் என் நேசனே உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே 2 உன் அன்பு தூய்மையானது - என் வாழ்வில் உன் அணைப்பே உயர்வானது வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிட மாட்டேன் (2) நம்பிக்கையின் தீபமாய் நீ இருக்கின்றாய் உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே 2 உன் அருளே மேலானது - என் வாழ்வில் உன் உறவு மாறாதது 2 உனக்காக நான் என்றும் காத்திருப்பேன் - 2 நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய் உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே 2 |