803-என் ஜீவன் பாடுது |
என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது - 2 அன்பே அருட் செல்வமே - 2 காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும் - 2 உன் வாக்கு மாறாது இறைவா புதுமை பிறந்தது பாவம் அழிந்தது - 2 புனிதம் சேர்த்திட வா இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்; - 2 என் பாடல் மாறாது இறைவா நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது - 2 வாழ்வை வளமாக்க வா |