800-என்னை ஒருபோதும் |
என்னை ஒருபோதும் ... பிரியாமல்.... கண்ணின் மணிபோல.... காக்கும் தெய்வமே.... இயேசுவே ஒரு போதும் பிரியாமல் உயிராக எனைக் காக்கும் என் தெய்வம் நீ இயேசுவே உன்னோடு நான் வாழ்ந்து உன் புகழ் பாடும் வரம் வேண்டும் என் தேவனே மலை போன்று உயர்வாகும் உன் அன்பு தேவா மாறாது மறையாது உன் பாசமே மண்மீது சொந்தம் நீதானே இறைவா மலர் போன்ற உன்பாதம் என் தஞ்சமே உன் பாதை செல்லும் பெருஞ்செல்வம் வேண்டும் உனைப் போல பிறர் வாழ பலியாக வேண்டும் உனக்காக உயிர் வாழுவேன் உன் வார்த்தையை வாழ்வாக்குவேன் தண்ணீரைத் தேடும் கலைமானைப் போல கண்ணான உனைத் தேடி மனம் வாடினேன் பயிர் வாழப் பொழியும் கார்மேகம் போல தாயாகித் தாலாட்டி எனைத் தேற்றினாய் இளங்காற்று நெஞ்சில் இறை தீபம் ஏற்றி பூத்தூவும் காற்றில் புதுராகம் மீட்டி கண்ணீரால் கவிபாடுவேன் காலமும் உனை வாழ்த்துவேன் |