799-என்னை ஆள அன்பு இறைவன் |
என்னை ஆள அன்பு இறைவன் எழுந்து வருகின்றார் எந்தன் இதய இருளை அகற்ற தேவன் வருகின்றார் இதயம் வாழும் உனது குரலும் என்னைத் தடுத்தது பரமன் உறவை பாவம் முறிக்கும் என்றும் சொன்னது (2) கல்லானது என் இதயம் முள்ளானது என் வழியும் - 2 இதய தீபம் அணைந்தது - 2 திரியை ஏற்ற இறைவா நீ வருவாய் நீரும் நிலமும் வானும் காற்றும் உன்னைத் தாங்கிட பாவி எந்தன் இதயம் மட்டும் வெறுமை கொண்டிட (2) பாவத்தின் விளைவிது சோகத்தின் நிலையிது - 2 இதய தீபம் அணைந்தது - 2 திரியை ஏற்ற இறைவா நீ வருவாய் |