Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   798-என்னுயிரே இயேசுவே  



ஸாஸநிஸரிஸா மத ஸாஸநிஸரிஸா
பத பாஸ நிசரி ரிரிபநிதா மகஸநி ஸரிசா

என்னுயிரே இயேசுவே என் தெய்வ நேசரே
என் இதயம் என்றுமே உன்பாதம் தஞ்சமே
எந்நாளும் உம்மை நான் என் வாழ்வில்புகழ

வருவாய் வருவாய் உணவாய் இறைவா
நிறைவாய் நிறைவாய் என்னில் முழுதாய்

மனுவுரு எடுத்த மன்னவனே இயேசுவே
மனதில் நிலைக்கவா மனிதம் நிலைக்கவா
உறவுகள் வளர்க்க உணவாய் வந்தவா
உள்ளம் குடிலில் வா உயிரில் கலக்க வா
ஆ...ஆ..ஆ...ஆ..
அன்பனும் நீயே நண்பனும் நீயே
அனுதினமும் நீயே - எந்தன் அடைக்கலமும் நீயே


உலகின் ஒளியாய் வந்தவரே இயேசுவே
வழியைக் காட்ட வா வாழ்வை மாற்ற வா
உண்மையும் நீயே உன்னதரே இயேசுவே
என்னில் வாழ வா அன்பில் ஆள வா
ஆ...ஆ..ஆ...ஆ..
எந்தையும் நீயே இன்பமும் நீயே
எழுந்திடுவாய் நீயே - என்னில் வளர்ந்திடுவாய் நீயே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்