Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   797-என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்  
என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார் - 2

உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே தினமும் தேடுமே - 2
பகலை மறைக்கும் முகிலாய் பல வழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீர
முழுமை தோன்றுமே

என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் - 2
என்று பகர்ந்த இறைவா எம்மை இணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்தி
அமைதி காணுவேன்

ஆயன் உம்மை நீங்கியே இருளில் ஓடினேன்
பாவம் என்னும் புதரிலே வீழ்ந்து வாடினேன் - 2
பரிவு கொண்டு இறைவா என்னைத் தேடி வந்தீரே
மனம் களித்து இன்று பாடுகின்றேன்
உவகை கீதமே




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்