Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   796-என்னில் எழுந்திடும்  

என்னில் எழுந்திடும் யேசுவே
உன்னில் கலந்திட வருகின்றேன்
என்னை முழுதும் ஆட்கொள்ளும்
எந்தன் தேவனே எந்தன் தலைவனே
உன்னில் வாழ்ந்திட அருள் தாரும் (2)

உன்னில் இருந்து விலகிச் சென்றேன்
என்னைத் தேடி ஓடி வந்தாய்
எனக்குப் பலமாய் நீயும் இருந்தால்
எனக்குப் பயமே ஏதும் இல்லை
அன்பனே நீ என்னை ஆள
அன்புடன் நீ என்னைத் தொடர
கண்ணின் மணியே எழுந்து வருவாய்
எழுந்து வருவாய் எழுந்து வருவாய் (2)

சோக நிலையில் வாடும் எனக்கு உன்
உடலைத் தந்து தேற்றுகின்றாய்
பகைவரால் நான் வாடும் பொழுது
பகைமை தகர்ந்து பாசம் தந்தாய்
அன்பனே நீ என்னை ஆள
அன்புடன் நீ என்னைத் தொடர
கண்ணின் மணியே எழுந்து வருவாய்
எழுந்து வருவாய் எழுந்து வருவாய் (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்