795-என்னில் எழும் தேவன் |
என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே (2) எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே மலரைப் போல் எந்தன் மனதினை தினம் திறந்து காத்திருந்தேன் (2) காலைப் பொழுதாக - எழும் கதிரே எனக்காக (2) எழுந்து மலர்ந்து இதயம் திறந்து வல்ல தேவன் என்னில் எழுந்தார் நிலவைப் போல் எந்தன் மனதினில் நீர் ஒளிரக் காத்திருந்தேன் (2) மாலைப் பொழுதாக - எழும் மதியே எனக்காக (2) இதயமதிலே உதயமாவாய் புதிய வாழ்வினையே தருவாய் |