Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   794-என்னகம் இணைய இறைவன்  
என்னகம் இணைய இறைவன் வந்தார்
இதயம் மகிழ்ந்து பாடுதே - 2 - பாவ
இருளை நீக்கி எந்தன் வாழ்வில்
அருள் ஒளியை ஏற்றவே - 2
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம் - அவரை
இணைந்து பிரியாமல் வாழந்திடுவோம் - 2 - என்னகம்

மனிதம் காத்திட மன்னாவைப் பொழிந்தாய்
புனிதம் ஓங்கிட இன்னுயிர் தந்தாய் -2
உன்னை உணவாக உள்ளம் நான் ஏற்று
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் .................வாழந்திடுவோம்

உந்தன் அன்பினில் நான் என்றும் நிலைக்க
எந்தன் உறவால் இறையரசைக் காக்க - 2
உன்னை உணவாக உள்ளம் நான் ஏற்று
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் ...............வாழ்ந்திடுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்